திருமலையில் மரம் முறிந்து விழுந்ததில் சாரதி வைத்தியசாலையில் அனுமதி!

 


(பதுர்தீன் சியானா)


திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி சாரதி  திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று (22) 4. 45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை அரசடி சந்தியைச்  சேர்ந்த டி. சுரேஷ் (44வயது) எனவும் தெரியவருகின்றது.


மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் மின்சார நிறைய வீதியால் சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் மரம் முறிந்த நிலையில் முச்சக்கர வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் கூறினார்.

இதேவேளை முறிந்த மரத்தை அகற்றும் பணியில் பொலிசார், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال