திருமலை வைத்தியசாலையில் வைத்தியருக்கு கொரோனா!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

விடுமுறை  சென்றுகடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வருகை தந்ததாகவும் அதனையடுத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு -கொடஹேன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 30 வயதுடைய வைத்தியர் எனவும் தெரியவருகின்றது .

குறித்த வைத்தியர் 5ம் 06 வாட்டில் கடமையாற்றியவர் எனவும் தெரியவருகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியரை IDH  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.