அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் மரணம்!




 (அப்துல்சலாம் யாசீம்)

அனுராதபுரம் மாவட்டம்- கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல ,இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (64வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது வீட்டுக்குஸஅருகில் சத்தம் கேட்டதையடுத்து கதவைத் திறந்து வெளியே செல்ல முற்பட்டபோது முன்னால் நின்ற யானை தூக்கி வீசியதாகவும் அதனை அடுத்து அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்தில் இருப்பதாகவும் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் கஹடகஸ்திகிலிய பொலிசார் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.