Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்- நால்வர் கைது

 

(அப்துல்சலாம் யாசீம்)

 திருகோணமலை- சீனக்குடா பகுதியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலையிலிருந்து கலாவெவ பகுதிக்கு சென்றுகொண்டிருந்த ரயில் மீது சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவரகம பகுதியில் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது ரயில் சாரதியின் உதவியாளர் கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

இதனையடுத்து கல்வீச்சு நடாத்திய சந்தேகநபர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் சீனக்குடா, தீவரகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இருவரும் 15  வயதுடைய ஒருவரும் பதிமூன்று வயது உடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 13 வயதுடைய சிறுவனுக்கு ஏற்கனவே நான்கு குற்றச்சாட்டுகள் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரையும் நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். 

No comments