திருமலைக்கு பெருமை தேடித் தந்த டொக்டர் எம். சிவதீபன்ராஜ்

 

(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மாணிக்கம் சிவ தீபன்ராஜ் மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் அதி சித்தியடைந்துள்ளார்.

மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் சித்தி பெற்று அகில இலங்கை ரீதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலை, இறக்கக்கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் நிலாவெளி கைலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்  வைத்தியத் துறையில் கல்வி பயின்று வந்துள்ளார். 

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் 30 பேர் தெரிவு செய்யப்பட்டனர். 

இதில் திருகோணமலைக்கு பெருமையை தேடித் தரும் இளம் வயதுடைய (30 வயது) மாணிக்கம் சிவ தீபன்ராஜ் என்பவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.