திருகோணமலை-ரொட்டவெவ பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய சிறுமிக்கு பால்மா மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மொரவெவ பிரதேச சபையின் தவிசாளரும், தெவனிபியவர இந்ராராம விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியினால் இன்று (25) வழங்கி வைக்கப்பட்டது.
விசேட தேவையுடைய தனது பிள்ளையின் நோயை குணப்படுத்தும் நோக்கில் சொத்துக்களை விற்று வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற இக்குடும்பத்திற்கு உதவுமாறு மொரவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் அவர்களினால் விடுக்கப்பட்ட இக்கோரிக்கையையினையடுத்து இன்றைய தினம் அவர்களுக்கான பால்மா மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் சிறுமியின் வளர்ச்சிக்கு தேவையான பால்மா வகைகள் மற்றும் உலர் உணவு பொருட்களை மாதாந்தம் வழங்குவதாகவும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி உறுதியளித்தார்.
No comments