பொதுத் தேர்தலுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு!

பொதுத்தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் 20ம் திகதி வரை ஒத்திவைத்தமை அரசியல் யாப்பிற்கு முரண் என்பதை அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராவய சிங்களப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட 7 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்டு பின் அதனை ஜூன் 20ம் திகத்திக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மாற்றியதால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

( ஜே. எம். காமிலா பேகம்) 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال