விடுதியொன்றில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தலில்!


திருகோணமலை - அலஸ்தோட்டம்  பகுதியில் பிரபல விடுதியொன்றில்  பிறந்தநாள் கொண்டாடியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தல்  சட்டத்தை மீறி பிரபல விடுதி ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடிய  குற்றச்சாட்டின் பேரில் பிரபல விடுதி மண்டப உரிமையாளர் மற்றும் பிறந்தநாள் கொண்டாடியவர்களை இன்று (22) தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அவ்வலுவலகம்  தெரிவித்துள்ளது. 

 கடந்த 15ஆம் திகதி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின்  அனுமதி பெறாமல் ஒன்றுகூடி பிறந்தநாளை கொண்டாடிய  நபர்கள் குறித்த  விபரங்களை  திரட்டி வருவதாகவும்  சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.