திருமலையில் விபத்து - இருவர் மரணம், மூவர் படுகாயம்)

திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறை முகத்துவாரம் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து  (04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-தாய், தந்தை மற்றும் 06 மாத குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் 06 மாத குழந்தையும் மோட்டார் சைக்கிளை செலுத்திய 17 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் 06 மாத குழந்தையின் தந்தையான சேறுநுவர - இலங்கை துறைமுகத்துவாரம், மத்திய வீதியைச் சேர்ந்த துஸேந்தன் அவரது மனைவி டிலக்ஸனா மற்றும்  மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கே.மயூரன் (17வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த ஈச்சிலம்பற்று-புன்னையடி பகுதியைச் சேர்ந்த வர்ணகுமார் டிலக்சன் (17வயது) என்பவருடைய  சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் 06 மாத குழந்தையான கன்சிகாவின் சடலம் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.