முஸ்லிம் பெண் மாத்தறையில் திடீர் மரணம்: அடக்கம் செய்ய பொலிஸார் தடைவிதிப்பு!

மாத்தறை – வெலிகம புதியவீதியில் வசித்த முஸ்லிம் பெண் ஒருவர் இன்று காலை திடீரென மரணித்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய பொலிஸார் தடை விதித்துள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
54 வயது குறித்த பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தனியார் வைத்தியசாலைக்கு அவரது மகனால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அரச வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி தனியார் வைத்தியசாலை நிர்வாகம் அறிவுறுத்தியதை அடுத்து ,மீண்டும் வீடுதிரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது குறுக்கீடு செய்த வெலிகம பொலிஸார், உடலை மரண விசாரணைக்காக மாத்தறை அரச வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று அச்சஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
(ஜே.எப். காமிலா பேகம்) 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.