மே 31 வரை ரெயின், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது- பழனிச்சாமி வலியுறுத்தல்.

மே 31 வரை ரெயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

அனைத்து மாநில முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை 


அனைத்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.மே 31 வரை ரெயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை மாலை முதல் இரவு வரை காணொலி காட்சி மூலம் தற்போது ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்ட உள்ளது. ஊரடங்கு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இந்த கூட்டம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 5-வது முறையாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று மாலை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது,  மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். மே  31 ஆம் தேதி வரை சென்னைக்கு ரெயில், விமான  சேவைகளை தொடங்க  வேண்டாம். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்.  

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் தானியங்களை இலவசமாக தர வேண்டும்’என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசை கடுமையாக சாடியதாக தகவல்கள் கூறுகின்றன.  மம்தாபானர்ஜி கூறுகையில், “ கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

மேற்குவங்காளத்தை  பொறுத்தவரையில் வெளிநாடுகளையும், பெரிய மாநிலங்களயும் எல்லையாக கொண்டுள்ளது. அதனால்  கொரோனா பரவலை தடுப்பதில் கடுமையான சவால்கள் உள்ளன. இருப்பினும் மாநில அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. இந்த இக்கட்டான தருணத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது. 

மத்திய அரசு அனைத்து மாநிலங்களயும் சமமாக நடத்த வேண்டும். சில மாநிலங்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. ஏற்கனவே எழுதப்பட்ட ”ஸ்க்ரிப்ட்” அடிப்படையில் மத்திய அரசு பணியாற்றுகிறது.  எங்களின் கருத்துக்களை யாருமே ஒருபோதும் கேட்பதில்லை” என்று தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

(திருச்சி எம் கே. ஷாகுல் ஹமீது) 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget