திருகோணமலை வைத்தியரின் சிகிச்சை- போற்றப்படும் பருத்தித்துறை வைத்தியசாலை!

 




யாழ்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத்தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை இன்று (01)  பிரசவித்துள்ளார். 


24 வயதான மேற்படி தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்க்கு முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.


மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதரா அவர்களின் மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிச்சை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال