மதுபான சாலை திறக்க அனுமதிக்க வேண்டாம்.தோப்பூரில் கவனயீர்ப்பு

 


திருகோணமலை- தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபானசாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து (08)  வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


தோப்பூர் -கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தோப்பூர்-கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும், 
அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைப்பதற்கு தாம் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget