கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்பு


வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான், மருத்துவ நிர்வாக முதலாம் நிலை கலாநிதி பட்ட பயிற்சியினை (M.D. in Medical Administration Part 1) நிறைவு செய்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 27/06/2023 இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இவர் இதற்கு முன் மொறவெவ ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றினார். காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பின்தங்கிய நிலைமையிலிருந்த மொறவெவா வைத்தியசாலையை தனது வழிகாட்டலின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் சிறந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் என்ற ஸ்தானத்திற்கு கொண்டு வந்தார்.


இவர் மருத்துவ நிர்வாக முதுகலை மாணி பட்டப்பயிற்ச்சியின் (M.Sc. in Medical Administration) பின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார். அங்கு அவர் கடமையாற்றிய குறுகிய காலத்தினுள் பல துரித அபிவிருத்தி செயற்திட்டங்களை தனது வழிகாட்டலின் கீழ் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

இவர் வைத்திய இளமானி பட்டம் மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலை மாணி பட்டம் (M.Sc. in Medical Administration) என்பவற்றிற்கு மேலதிகமாக வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவைகளில் நிபுணத்துவ வணிக முகாமைத்துவ முதுகலைமாணி பட்டம் (MBA in Hospital & Health Services Management) (ஐக்கிய இராச்சியம்), சுகாதார தரநிலை மற்றும் நோயாளர் பாதுகாப்பு பட்டப்பின்படிப்பு டிப்ளோமா (PG Dip in Healthcare Quality & Patient Safety) (கொழும்பு பல்கலைக்கழகம்), சுகாதார தகவல் தொழில்நுட்ப துணை நிபுணத்துவ பட்டம் (Specialisation in Healthcare IT Support) (ஐக்கிய அமெரிக்கா), சுகாதாரத்துறைக்கான செயற்கை நுண்ணறிவுகளின் நெறிமுறைகள் மற்றும் ஆளுகை தொடர்பான பட்டம் (Ethics and Governance of Artificial Intelligence for Health) (உலக சுகாதார ஸ்தாபனம்) போன்றவற்றை நிறைவு செய்ததுடன் தற்போது சுகாதார அபிவிருத்தி பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பயிற்ச்சியினையும் (PG Dip in Health Development) (கொழும்பு பல்கலைக்கழகம்) தொடர்கின்றார்.

இவரது பெற்றோர்கள் (வைத்திய கலாநிதி திரு மற்றும் திருமதி ஞானகுணாளன்) கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகிகளாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் போன்ற பதவிகளில் கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான், திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget