திருகோணமலை கடலில் மூழ்கி இந்திய இளைஞர் மரணம்!

 




இந்தியா தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலைக்கு  சுற்றுலா வந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி இன்று (17)  உயிரிழந்துள்ளார்.


திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள  ஹோட்டலொன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.



இதேவேளை நீரில் மூழ்கிய நிலையில் (16ம் திகதி) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போது இன்று (17)  காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தமிழ்நாடு- திருநெல்வேலி 76/A சர்க்கரை விநாயகர் வீதியில் வசித்து வரும் கஸ்தூரி ரங்கன் ஜெயசூர்ய (26வயது) எனவும் தெரிய வருகின்றது 

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட பைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் குறித்த இளைஞரின்  உறவினர்கள் திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில் சடலத்தை இந்தியா கொண்டு செல்வதற்குறிய ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றனர்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.