மாணவர் ஒருவரிடமிருந்து தங்க ஆபரணம் திருட்டு திருகோணமலைக்கு பஸ்ஸில் பயணித்தபோது கைவரிசை!

 


           (அப்துல்சலாம் யாசீம்)
கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரிடமிருந்து சூட்சுமமான முறையில் இரண்டு பவுண் பெறுமதியான தங்க ஆபரணத்தை திருடிச்சென்றுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு சமாதி வீதியில் வசிக்கும் பி. நிதர்ஷன் (20வயது) எனும் மாணவன் கண்டி பேராதெனியவில் இணையத்தள பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நெறியில் கல்வி கற்று வருகின்றார். 

https://youtu.be/gdvHDbs5wPE


இவர் விடுமுறைக்காக திருகோணமலையிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது   பஸ்ஸில் தனது ஆசனத்துக்கு அருகில் 45வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்துள்ளார். இருவரும் நட்பு ரீதியாக பேசிக் கொண்டு வந்த போது தன்னை பிஸ்கட் சாப்பிடுமாறு கொடுத்துள்ளார். வேண்டாம் எனக் கூறியபோதிலும், இல்லை பரவாயில்லை சாப்பிடுங்கள் என   வற்புறுத்தியதையடுத்து பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் போத்தலையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மயக்கமுற்ற மாணவன் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். 

அதேவேளை அவருடைய கழுத்தில் இருந்த இரண்டு பவுண் பெறுமதியான தங்க ஆபரணத்தையும் திருடிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.