தூக்கில் தொங்கிய நிலையில் தம்பலகாமத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

 நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனடியாக வீடியோ வடிவில்  தெரிந்து கொள்ள Trincolive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும். பெல் பட்டனை அழுத்தவும்.மற்றவர்களுக்கும் செயார் செய்யவும்.


(பதுர்தீன் சியானா)


தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சடலம் இன்று (27) மாலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம் -பொற்கேணி பகுதியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்தம்பலம் திருநாவுக்கரசு (66வயது) எனவும் வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நஞ்சறுந்திய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

ஒரு மாத காலமாக மன உளைச்சல் காரணமாக அங்கும் இங்கும் நடமாடி வந்திருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வயல் பிரதேசத்தில் மரம் ஒன்று தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும், மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.