திருகோணமலை புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 20 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வள்ளங்களும், உபகரணங்களும் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டது.
பிலால்நகர், சதாம்நகர், பட்டிகுடா ஆகிய கிராமங்களுக்கான முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனம் 20 மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் மற்றும் உபகரணங்களை கையளித்தனர்.
பட்டிகுடா, களப்பு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் புல்மோட்டை 4 ஆம் வட்டார கிராம, பொருளாதார,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்
M.A.M. அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவி பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் உரையாற்றுகையில், இத்திட்டத்தை நீங்கள் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, முஸ்லிம் எயிட் நிறுவனமும் பிரதேச செயலகமும் இத்திட்டத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவே வழங்கப்பட்ட உபகரணங்களை முறையாக பயன்படுத்தி உச்சபயனை அடையுமாறும் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்ட நிலைமைக்கு மத்தியில் நாட்டில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் நிறுவனம் வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள் இல்லை :
Post a Comment