(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ராசிக் பரீட் பர்ஹான் (29வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவரான முன்னாள் இராணுவ வீரர் தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்தியதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிசார் கைக்குண்டை தமது கண்காணிப்பின் கீழ் எடுத்துள்ளதாகவும் குறித்த கைக்குண்டு இருக்கும் இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அனுமதியைப் பெற உள்ளதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments