தம்பலகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ...திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம்-முள்ளியடி பகுதியைச் சேர்ந்த துரைராசா செல்வகுமார் (40 வயத எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது-  குறித்த நபர்  மூன்று திருமணம் செய்துகொள்ள தாகவும் தற்போது மூன்றாவது மனைவியுடன்  வாழ்ந்து வரும் நிலையில் இருவருக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தானாகவே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆனாலும் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் கொண்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


இதேவேளை குறித்த சடலத்தை பீசீஆர் பரிசோதனை செய்து அறிக்கை கிடைத்தவுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


இவரது மரணம் தொடர்பில் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.