Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சேனைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கும்-வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை

 


திருகோணமலை- ரொட்டவெவ,மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சேனைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கும்-வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த யுத்த காலம் தொடக்கம் இன்றுவரை தமது வாழ்வாதார தொழிலாக விவசாயம் மீன்பிடி மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது சேனைப்பயிர்ச்செய்கைக்காக தங்களுடைய காணிகளுக்குள் செல்லும் போது வன இலாகா அதிகாரிகள் செல்லக் கூடாது என தடுப்பதாகவும்,

பயமுறுத்துவதாக வும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு வன இலாகா அதிகாரிகள் சென்று சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த பயிர்ச்செய்கையாளர்களை அரசுக்குச் சொந்தமான காணியில் இருந்து செல்லுமாறு கூறியதையடுத்து பொதுமக்களுக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


 யுத்த காலத்தின் போது தமது அன்றாட தொழிலாக சேனை பயிற்சிய மேற்கொண்டு வந்ததாகவும், மிரிஸ்வெவ மக்களின் நலன் கருதி மஹதிவுல்வெவகுளத்திற்குச் செல்லும் வீதியை கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது நிர்மாணித்து கமநெகும,மகநெகும திட்டத்தின் கீழ் இரண்டு குளங்கள் புணரமைக்கப்பட்டுள்ளதாகவும் சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


ஆனாலும் கடந்த வருடம் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கண்டிருந்த வேளை   காடுகளை வெட்டாமல் தமக்குரிய காணிகளில் சேனைப்பயிர்செய்கையை முன்னெடுக்குமாறு அரசியல் வாதிகளினால் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் இம்முறை வன இலாகா அதிகாரிகள் அரசுக்குச் சொந்தமான காணி என கூறி வருவதாகவும் வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சி செய்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஆகவே தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வரும் மக்களுக்கு அரசாங்கம் யுத்த காலத்தின் போது பயன்படுத்திய காணிகளை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




No comments