திருகோணமலையில் இரண்டு நாள் நீர் விநியோகம் துண்டிப்பு...

 


திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 22 மற்றும் 23 திகதிகளில் நீர் துண்டிப்பு இடம்பெற உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜயந்தன் தெரிவித்தார்.


கந்தளாய்-திருகோணமலை பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட திருத்த வேலை காரணமாக 22ஆம் திகதி முழுமையாக நீர் துண்டிக்கப்பட உள்ளதாகவும், 23ம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெற உள்ளதாகவும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.


கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் துண்டிப்பு இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தமக்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.