திருகோணமலை கடைகளுக்கு நாளை (17) செவ்வாய்க்கிழமை மாத்திரம் சந்தர்ப்பம்!


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் கடைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப் பட்டிருந்தது.


ஆனாலும் சில பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்கும் மரக்கறிகளை பெற்றுக் கொள்ள தம்புள்ளை பகுதிக்கும் சென்றுள்ளனர்.

இதனால் வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக நாளை செவ்வாய்க்கிழமை மாத்திரம் கடைகள் திறந்திருக்கும்.


இதேவேளை நாளை மறுநாள் புதன்கிழமை தொடக்கம் கடைகளை மூட திருகோணமலை பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் உயர் அதிகாரியொருவர். தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال