கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவு - சுகாதார வைத்திய அதிகாரிகள்(அப்துல்சலாம் யாசீம்)


கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளதாக கிண்ணியா பிரதேசத்தில் உள்ள - சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கிண்ணியாவில் முடக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட அண்டிஜென் பரிசோதனையின் படி கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம்.எச்.எம்.ரிஸ்வி, டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை ரஹ்மானியா நகர் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் எவரும் இனங்காணப் படவில்லை. 


கடந்த சனிக்கிழமை மாலிந்துறை, பெரிய கிண்ணியா பகுதிகளில் 100 பேருக்கு மேற்கொள்ளப் பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 4 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டனர். 


அதேபோல குறிஞ்சாக்கேணி பகுதியில் 100 பேருக்கு மேற்கொள்ளப் பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 3 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டனர். 


இதேவேளை முடக்கப் படாத பகுதிகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் பொது மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.