உணவுப் பொருட்கள் வழங்கி வைத்த வெள்ளத்தம்பி சுரேஷ்!
(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-சாம்பல்தீவு மாங்கினாய் கிராமத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.குகதாசனின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டணமும்,சூழலும் கோட்டக்கிளைத்தலைவர் வெள்ளத்தம்பி சுரேஷ் என்பவரினால்  வடலிப் பிள்ளையார் கோயில் ஆலய பரிபாலன சபையினரிடம் கையளிக்கப்பட்டது.வறுமையில் வாழும் கஷ்டமான குடும்பங்களை தெரிவுசெய்து இப்பொருட்களை வழங்குமாறும் வெள்ளத்தம்பி  சுரேஷ் ஆலய பரிபாலன சபையிடம் தெரிவித்தார். தன்னால் இயலுமான உதவிகளை வழங்குவதாகவும், எதிர்காலத்தில் மேலும் சமூக பணிகளை செய்வதற்கு தங்களுடைய ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்குமாறும் இதன்போது கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.