திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள்-இரண்டு மரணங்கள் பதிவு

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (09) வெளியிட்டுள்ள கொரோனா தொடர்பிலான அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிண்ணியா பிரதேசத்தில் 17 தொற்றாளர்களும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று பேரும்,கோமரங்கடவல பிரதேசத்தில் 6 தொற்றாளர்களும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், மூதூர் பிரதேசத்தில் 6 தொற்றாளர்களும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 27 கொரோனா தொற்றாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 247 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  66 பேருக்கு பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதிவரை 294 பேருக்கு திருகோணமலை மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 3719 பேர் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 111 பேர் இன்று வரைக்கும் உயிரிழந்துள்ளதாகவும், 95 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை  பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.