திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரத்தை வழங்குமாறு சமூக அபிவிருத்தி கட்சி கோரிக்கை!


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அபிவிருத்தி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராய்சிக்கு இன்று (25) அக்கட்சியின் பொதுச் சயலாளர் குகதாஸ் பிரகாஷ் கடிதமொன்றை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படுவதால் சந்தேகமான நோயாளர்களை பரிசோதனை செய்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டு மட்டக்களப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பின்னரே அறிக்கைகள் வருவதாகவும் இதனால் அவர்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மூவின மக்களும் திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தின் தலைநகராக கொண்ட திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிசிஆர்  இயந்திரம் இல்லாமை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மிக விரைவாக பிசிஆர் இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.