புடையன் பாம்பு தீண்டியதில் சிறுவன் வைத்தியசாலையில்

 

(அப்துல்சலாம் யாசீம்)திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பகொட்ட  பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டிய சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.


வீட்டுக்கு முன்னால் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டியதில் சிறுவன் மயக்கமுற்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று (16) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு பாம்புக்கு இந்தய சிறுவன் திருகோணமலை-கம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த தேவிந்த பிரசாந் (10வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.