திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் காணாமல் போன 3 மீனவர்களையும் ஆறாவது நாட்களாக தேடும் பணியில் சக மீனவர்கள்


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் பணிகள் 6-வது நாளாக இன்று (28) ஈடுபட்டுள்ளனர்.

திருக்கடலூர் பகுதியில் கடந்த 23ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில்  கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை.


இவர்களை தேடும் பணியில் திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தினர் ஆறாவது நாட்களாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக 

இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் ஜெயசங்கர் சஞ்சீவன் (21)
ஜீவரெட்ணம் சரன்ராஜ்(34)
சிவசுப்ரமணியம் நதுசன்(21) என்பவர்களே படகில் சென்றவர்களாவர்.

இவர்களைத் தேடி பல படகுகள் ஆழ்கடலுக்கு சென்றும் இவர்களை இன்னும் கண்டுகொள்ள முடியவில்லையெனவும் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மூன்று மீனவர்களின் குடும்பத்திற்கு திருகோணமலையை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்றைய தினம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்குச் சென்று தங்களுடைய பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பவில்லை எனவும் மிக விரைவில் அவர்களை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மீன்பிடி திணைக்களமும் மீன்பிடி அமைச்சரும், அனர்த்த முகாமைத்துவ திணைக்களமும் இணைந்து மீட்டுத் தருவதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைசமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் குகதாஸ் பிரகாஷ் நேரில் சென்று  பேசியதுடன், ஆறுதல் வழங்கியதையும் காணக் கூடியதாக இருந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.