Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை மாவட்டத்தில் 1517 பேருக்கு கொரோனா-12 மரணங்கள் பதிவு!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 517 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
 டி. ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.

இன்றிரவு  (03) 9.00 மணியளவில் தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதனடிப்படையில் கடந்த 2ஆம் திகதி வரை ஆயிரத்து 517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 401 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,506 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் முதலாம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் 34 பேருக்கும், இரண்டாம் திகதி 42 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரைக்கும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 641 பேர் இனம் காணப்பட்டுள்ளதாகவும், உப்புவெளி பிரதேசத்தில் 382 பேரும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 156 பேரும் குச்சவெளி பிரதேசத்தில் 49 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 38 பேரும் மூதூர் பிரதேசத்தில் 99 பேரும், சேறுவில பிரதேசத்தில் 18 பேரும் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஒருவரும், கந்தளாயில் 73 பேரும் தம்பலகாமத்தில் 25 பேரும் கோமரங்கடவல பிரதேசத்தில் 27 பேரும் பதவிசிறிபுர  பகுதியில் 8 பேரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
டி ஜீ. எம்.கொஸ்தா தெரிவித்தார்.

No comments