ரொட்டவெவ பகுதியில் போதைப்பொருள் விநியோகஸ்தர் விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது

 


திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ  பகுதியில் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தர் ஒருவரை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் இன்று (25) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த  ஜூனைதீன் சரூக்  என்று அழைக்கப்படும் 38 வயது உடைய  கஞ்சா நஸ்லிம் எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குகளுடன் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விசேட  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.