(அப்துல்சலாம் யாசீம்)
கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தை சுகாதாரத் துறை அடையாளம் கண்டுள்ளதால் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
வீதித் தடைகளை தவிர்த்து பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்குமாறு ஆளுநர் இன்று (23) பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை திருகோணமலையில் விசேட பாதுகாப்பு திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்துமாறு ஆளுநர் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தினார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும் அனைவருக்கும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஆளுநர் அனுராதா யகம்பத் பாதுகாப்பு படையினருக்கு இதன்போது உத்தரவிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ள கோமரங்கடவல மற்றும் பதவி ஸ்ரீபுர பகுதிகளில் இருந்து திருகோணமலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சிறுநீரக நோயாளிகளுக்கு கோவிட் -19 தொற்று மிக வேகமாக இருப்பதை சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளதால் ஆளுநர் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
No comments