நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கு -கிழக்கு ஆளுநர்

 


(அப்துல்சலாம் யாசீம்)


கிருமி நாசினி பாவனையற்ற பத்தாயிரம் ஏக்கர் விவசாயத்தினை உருவாக்குவதே தனது இலக்கு என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

தற்போது இருக்கின்ற காபன் கலந்த விவசாயத்தின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உட்பட்டு வருகின்றார்கள்.

 எனவே இதுதொடர்பாக கிருமிநாசினிகள் அற்ற ஒரு திட்டத்தினை ஆரம்பித்து வைத்து அதன் அறுவடையின் போது 
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல  பிரதேசத்தில் வைத்து அவர் இவ்வாறு கூறினார்.

 மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்- எங்களுடைய எதிர்கால சந்ததியினர் நோயற்ற ஒரு சமுதாயமாக மாற வேண்டுமாக இருந்தால் கிருமிநாசினிகள் அற்ற உணவு பழக்கத்தை நோக்கி அவர்கள் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர  பிரதேசம் இருக்கின்றது.

இந்த நோய் அறிகுறியும் நோய் தாக்கமும் திடீர் அதிகரிப்பானது சுகாதார தரப்பினருக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

மக்களுக்கு வழங்கப்பட்டு  600 ஏக்கர் காணியில் எந்தவிதமான கிருமிநாசினியும் இல்லாத இயற்கையான விவசாயத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

எனவே இது தொடர்பாக அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

 மேலும் நோய் உள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து ஒரு சிறப்பான அபிவிருத்தியை பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சிக்கு விவசாய ஆலோசகர் கலாநிதி கீர்த்தி விக்கிரமசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.