திருமலை- துறைமுக பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!


திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (08) சிகிச்சைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு  பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தருடன் நெருங்கி பழகிய மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை கந்தளாய் பிரதேசத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் தேவைக்கேற்ற விதத்தில் பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது .

பொது மக்கள் தொடர்ந்தும் முகக் கவசங்களை பாவிக்குமாறும் சமூக இடைவெளிகளை தொடர்ந்தும் பேணுமாறு சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.