(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் கெப் வாகனம் மற்றும் முற்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்றிரவு (02) 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்த கெப் வாகனமும் -மொரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை-சங்கமம் பகுதியைச் சேர்ந்த துறைமுக அதிகாரசபையில் கடமையாற்றி வந்த அப்துல் ரஹீம் அப்துல் கலாம் (60 வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதைவேளை முச்சக்கரவண்டியில் பயணித்த மொரவெவ விமானப்படை முகாமில் கடமையாற்றி வரும் கே.ஜீ.எப்.எப்.ஜயசிங்க (26வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
No comments