விதவை தாய்மார்களுக்கு உலர் உணவு பொருற்கள் வழங்கி வைப்பு

 


ஈரோஸ் அமைப்பின் 46வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக விதவைத் தாய் மார்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தலைவர் திரு நேசன் சங்கர்ராஜி அவர்களின் வழிகாட்டலின் கீழ்  EROS-EDPA அமைப்பின் மூத்த தோழரும் பிரதி தலைவருமான தோழர் சிவதர்சன் அவர்களின் தலைமையில் “மீன் பாடும் தேனாடாம்" மட்டக்களப்பில் சுகாதார நடைமுறையினை பின்பற்றி இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 


காலத்தின் தேவையறிந்து நாற்பதுக்கும் மேற்பட்ட விதவை தாய்மார்களுக்கு உலர் உணவு பொருற்கள் மூத்த ஈரோஸ் தோழர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. 

EROS அமைப்பினை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்களான தோழர்கள் இரட்ணசபாபதி, பாலகுமார், சங்கர் ராஜி ஆகியோரின் எண்ணக் கருவினை சிரமேற் கொண்டு,

வட கிழக்கு மலையகம் வடமேல் மாகாணத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற எமது மக்களின் எழுச்சிக்காய் ஒன்றுப்பட்டு எங்கள் தலைவர் தோழர் நேசன் சங்கர் ராஜீ அவர்களின் இணையற்ற தலைமையில் செயற்பட உறுதிப் பூனுகுரோம் எனவும் ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு சிந்தனையோடு இன்று மக்களின் முன்னிலையில் EROS-EDPA அமைப்பு பிரதி தலைவர் சிவதர்ஷன் இவ்வாறு தெரிவித்தார்.


EROS காலத்தின் தேவையறிந்து மூத்த தோழர்கள் இரட்ணசபாபதி, பாலகுமார், சங்கர் ராஜீ ஆகியோராலும் அவர்களுக்கு தோழ் கொடுத்த ஏனைய மூத்த தோழர்களாலும் எம் சமூக விடியலுக்காய் உருவாக்கப்பட்டது. 


நம் சமூகம் கடந்து வந்த பாதைகள் முட்கள், தடைகள் நிறைந்வையாகவுமே இருந்து வந்துள்ளது.

போரியல் ரீதியாக பல போராட்டங்களை கண்ட எம் சமூகம் இன்றும் கூட விடியலைக் காண பகீரத பிரயத்தனங்களை பல் வேறு கோணங்களில் பல் வேறு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான பின்னணியினை மையப்படுத்தி நாம் EROS-EDPA ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பு என்ற பெயரில், EROS அமைப்பின் கட்டளைத் தளபதி தோழர் சங்கர் ராஜீ அவர்களின் புதல்வர் தோழர் நேசன் சங்கர் ராஜீ அவர்களின் தலைமையில் EROS அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக் கொண்டு வட கிழக்கு மலையகம் வடமேல் மாகாணங்களில் செயற்பட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஜனநாயக ரீதியாக எமது மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நிலைநாட்டி எதிர்காலம் சுபீட்சமிக்கதாக அமையப் பெறுவதே எமது பிரதான குறிக்கோளாகும். 


எமது EROS-EDPA அமைப்பு எம் சமூகம் அனைத்து வாழ்வியல் அடிப்படைகளையும் பெற்றுக் கொள்வதினை உறுதி செய்ய திடசங்கற்ப்பம் பூண்டுள்ளதனை இத்தருணத்தில் உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில் எமது சமூகத்தின் சகல தரப்பினரையும் EROS ஜனநாயக முற்போக்கு கூட்டமைபின்  தலைவர் தோழர் நேசன் சங்கர் ராஜீ அவர்களின் தலைமையில்  அணித்திரலுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என EROS-EDPA பிரதி தலைவர் சிவதர்ஷன் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget