கிழக்கு மாகாணத்தில் 38 புதிய தொற்றாளர்கள்-மாகாண பணிப்பாளர் அழகையா லதாகரன் (வீடியோ இணைப்பு)




(அப்துல்சலாம் யாசீம்)


கிழக்கு மாகாணத்தில் 38 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (05)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 1323 நபர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் 802 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதாகவும் 539 நபர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஏழு மரணங்கள் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளதுடன்  திருகோணமலை மாவட்டத்தில் 173  நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அம்பாறை பிராந்தியத்தில் 34 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் கல்முனைப் பிராந்தியத்தில் 752 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் கல்முனை நகர் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு, அல்லது காவல் துறையினருக்கு அறிவிக்குமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال