திருகோணமலை மாவட்டத்தில் இன்று மாத்திரம் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் இன்று 16ம் திகதி கிடைக்கப்பெற்ற பீசீஆர்  அறிக்கையின்படி 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தொற்று விபரம் தொடர்பில் இன்றிரவு (16)  8.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11 ஆம், 12 ஆம் திகதிகளில் பெறப்பட்ட பிசீஆர் அறிக்கையின்படி 5 பேருக்கு  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் படி மூன்று பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்  கிண்ணியாவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று
(16ம் திகதி)   145  பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும்  மட்கோ  பகுதியை சேர்ந்த 43 வயதுடையர் எனவும் தெரியவருவதுடன்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் , மூதூர் பிரதேசத்தில் 49 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்று  உறுதி செய்யப்படவில்லை எனவும், குறிஞ்சாங்கேணி சுகாதார பிரிவில் 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று 16ஆம் திகதி கிடைக்கப்பெற்ற  பிசிஆர் பரிசோதனையில் மூலம்  09 பேரும்,அன்டிஜன் பரிசோதனையில் 17 பேரும் மொத்தமாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال