இலங்கை இராணுவமும் கிண்ணியா பிரதேச செயலகமும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் விசேட செயற் திட்டமான ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச கடற்கரையோர வீதிகளை அண்மித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை இன்று (13) ஞயிற்றுக் கிழமை மேற்கொண்டனர்.
தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் ஆங்காங்கே நீர் தேங்கி காணப்படுவதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்த கிண்ணியா பிரதேச செயலாளர் இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எங்கும் பரவுவதற்கு காரணமாக இருந்த பொருட்களையும அப்புறப்படுத்தும் வேலைத் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார் .
பிரதேச செயலாளர் எம் எச். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் மேஜர் திஸாநாயக்க அவர்களும் அவர்களின் சிப்பாய் ஊழியர்கள் பலரும் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பட்டதாரிகள் 600 பேர்களும் இவ் வேலை திட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் டெங்கு பரவும் சூழ்நிலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இங்கு காணப்படுகின்ற டெங்கு பரவும் வகையில் மற்றும் நீர்சேமிப்பு பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தி கிண்ணியா நகர சபை ஊடாக இதனை கழிவகற்றும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
RELATED POSTS
"ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்"கிண்ணியாவில்
Reviewed by
NewsTrincoMedia
on
December 13, 2020
Rating:
5
0 கருத்துகள் இல்லை :
Post a Comment