ஹொங்கொங் யுவதிக்கு பாலியல் சேட்டை குற்றவாளிக்கு ஒரு வருட கடூழிய சிறை (வீடியோ இணைப்பு)

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-நிலாவெளி சுற்றுலா ஹோட்டலில் ஹொங்கொங் யுவதிக்கு பாலியல் சேட்டை செய்த குற்றவாளிக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அத்தண்டனை ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா  குமாரி ரத்நாயக்க இன்று (09) இக்கட்டளையை பிறப்பித்தார்.

இக்குற்றவாளி இரத்னபுரி-ஓபனாயக பகுதியைச் சேர்ந்த டபிள்யூ. அஜித் சஞ்சீவகுமார (38 வயது எனவும்) பொலிஸார் தெரிவித்தனர்.

2020 ஆறாம் மாதம் 28ஆம் திகதி நிலாவெளி சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதிக்கு பாலியல் சேட்டை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை-துறைமுக பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்து குறித்து சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டு இன்றைய தினம் துறைமுக பொலிசாரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றத்தை தான் செய்ததாக நீதவான் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.
குறித்த குற்றவாளிக்கு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன்  ஐந்து வருடத்துக்கு ஒத்திவைத்தார்.

இதே நேரம் தான் செய்த குற்றத்திற்காக 1500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதகால சிறை தண்டனை விதிக்குமாறும் பாதிக்கப்பட்ட ஹொங்கொங் நாட்டு யுவதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனைச் செலுத்த தவறினால் 6 மாத கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.