(அப்துல்சலாம் யாசீம்)
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பேனாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் 341 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் 219 பேரும் அம்பாரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குபட்ட பகுதியில் 12 நோயாளர்கள் பிசிஆர் பரிசோதனையின் மூலம் இனம் காணப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 94 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 341 பேர் இனங்காணப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பொது சந்தையுடன் 186 பேர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவரை கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை பேனாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையற்ற விதத்தில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
No comments