(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த பீ.எச்.சுமண பண்டார (54 வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த பொலிஸ் பரிசோதகர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்து பொலிஸ் பரிசோதகர் துணை தொடர்பில் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments