மொரவெவ-யானைக்கு வைத்த மின்கம்பியில் சிக்கி இளைஞன் மரணம்! (வீடியோ இணைப்பு)

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (15)
11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு-காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் கிருஷாந்தன் (22வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பன்குளம்-ஆறாம் வாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவரின் தாயின் தங்கையின் (சித்தி வீட்டில்) வேலைக்காக சென்றிருந்ததாகவும் இதேவேளை இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், திருட்டுத்தனமாக மின்சாரத்தை பொருத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.