Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

அமெரிக்கா கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது!

 


(எப்.முபாரக்)

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நூறு டொலர்  பெறுமதியுடைய  அமெரிக்கா கள்ள நோட்டுகள் 372 வுடன் இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு (23) கைது செய்துள்ளதாக கந்தளாய் விசேடகுற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மற்றும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 49 வயதுடைய இருவரை கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் கொழும்பிலிருந்து  கார் ஒன்றில் திருகோணமலை பகுதியை நோக்கிச் சென்ற போதே கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து நூறு டொலர் பெறுமதியுடைய   372 அமெரிக்கா திருட்டு  டொலர்களுடன் கந்தளாய் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சொகுசு காருடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த அமெரிக்கா டொலர்கள் இலங்கை பெறுமதியில் 68 இலட்சத்து 5000 ரூயாய்களாகும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்  ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments