Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் மதில் விழுந்து சிறுவன் படுகாயம்!


(பதுர்தீன் சியானா)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில்  சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (27) 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இவ்வனர்த்தத்தில் திருகோணமலை-புளியங்குளம்-தேவ நகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன்  அர்ஜுன் (10வயது) சிறுவன் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் உயரமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதில் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக இடிந்து விழுந்த நிலையில் சிறுவன் சிக்குண்டதாவும், அயலவர்களின்   உதவியுடன்  அரை மணி நேரத்துக்குள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தனேந்திரன் தெரிவித்தார்.


ஆனாலும் சிறுவனின் இரண்டு கைகள் உடைந்த நிலையில் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.



No comments