ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நஞ்சருந்தியதில் யுவதி மரணம்!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில்   16 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேரையும் இன்று (06) 9.20 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் என். விதூசிகா (16வயது) யுவதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதில் திருகோணமலை-அனந்தபுரி பகுதியைச் சேர்ந்த தாயாரான என். நாகேஸ்வரி (31வயது) என்.வைஸ்னவீ (12வயது) என். ஐஸ்வர்யா (08வயது) மற்றும் என். கஜவீர் (02வயது) ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நஞ்சு அருந்துவதற்குரிய காரணம் எதுவும் தெரியவில்லை எனவும் பூசாரியொருவருடைய  மனைவி பிள்ளைகள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது குறித்த சம்பவம் குறித்து  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.