Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

குச்சவெளி-சலப்பையாறு பகுதியில் 85 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலப்பிரிவிற்குட்பட்ட  சலப்பையாறு பிரதேசத்தில்  85 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17)  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது . 



கிராமிய வீடமைப்பு    நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தில் மாவட்டத்தில் மொத்தமாக 250 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.


குச்சவெளி பிரதேசத்திலிருந்து யுத்த காலத்தின் போது இடம் பெயர்ந்து இந்தியாவிலிருந்து  வருகை தந்த 75 குடும்பங்களுக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தத  10 குடும்பங்களுக்கும் இவ்வீடுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள இதன்போது தெரிவித்தார்.

அத்துடன்  குச்சவெளி பிரதேசத்தில் 2174 காணி இல்லாதவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் எனவும் குச்சவெளி பிரதேச செயலாளர் பீ.தனேஸ்வரன் இதன்போது கேட்டுக் கொண்டார்.


இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் குச்சவெளி பிரதேச செயலாளர் பீ.தனேஸ்வரன் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments