(பதுர்தீன் சியானா)
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா- நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி (13வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவனுக்கு உடம்பில் வலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் மரணத்திற்கான காரணம் எதுவும் தெரியாதமையினால் குறித்த சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் மரணித்தமை தொடர்பில் வைத்தியசாலையில் பதட்ட நிலை ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.