Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கத்திக்குத்துக்கு இலக்காகி பெண்ணொருவர் மரணம். ஹொரவ்பொத்தானையில் கொடூரம்!


அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள்  வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று  (26) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது கணவருடன் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்து கணவருக்கு முகக்கவசம் இல்லாததினால் தனது பிள்ளையை வைத்துக் கொண்டு  முன்னால் நின்ற போது இனம் தெரியாத நபர் ஒருவர் நிதி நிறுவனத்துக்குள் உட்புகுந்து கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.


குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹொரவ்பொத்தான- 122 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட
லேவாசபிரிவெவ பியதாசகே தம்மிகா பிரியதர்ஷினி (34 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிசார் தெரிவித்தனர்.

No comments