கிண்ணியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து சிறுவன் மரணம்!

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில்  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா -வான் எல பகுதியைச் சேர்ந்த சுக்கூர் றயான் ( 16 வயதுடைய )
இளைஞர் எனவும் தெரியவருகின்றது.



குறித்த இளைஞர் சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ முகாமுக்கு முன்னால் போடப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.